மகேந்திரமங்கலம், ஆகஸ்ட் 9, 2025 – ஆடி 24
சம்பந்தப்பட்ட நிலத்திற்கான பத்திரங்கள் மற்றும் வருவாய் துறை ஆவணங்கள் முறையாக இருந்தும், சில மாதங்களுக்கு முன்பு சரவணன் மற்றும் முனியப்பன், கணேசனின் வீட்டில் புகுந்து கொடுவாளால் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது, கணேசனின் தாய் சின்னம்மாளின் தலையில் அடிபட்டு காயமடைந்தார். இதுகுறித்து மகேந்திரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டாலும், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், குற்றவாளிகளுக்கு ஆதரவாக உள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
நேற்று இரவு மீண்டும் கணேசனின் வீட்டில் புகுந்த சரவணன், முனியப்பன் ஆகியோர், அவரை கொலை செய்யும் நோக்கில் தாக்கி, காலில் வெட்டியுள்ளனர். படுகாயமடைந்த கணேசன் தற்போது பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். “எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு சரவணன் மற்றும் முனியப்பனே காரணம். எனக்கு உயிர் பாதுகாப்பு அளித்து, இவர்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் கணேசன்.