மொரப்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட சாமாண்டஅள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், “தாயின் பெயரில் ஒரு மரக்கன்று” என்ற திட்டத்தின் கீழ் மரக்கன்று நடும் நிகழ்ச்சி மிகவும் உற்சாகமாக நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் மட்டும் அல்லாமல், வீட்டுக்கு வீடு சென்றும் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. மாணவர்கள் ஆர்வத்துடன் இதில் பங்கேற்று, வேம்பு, புங்கமரம், துளசி, பப்பாளி, பூவரசம், சீதா, காட்டு நெல்லி உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகளை நட்டனர்.
பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி பெ. சாரதா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், உதவி ஆசிரியர்கள் ர. கோவிந்தராஜ், சா. சிவராஜ், சி. உஷாராணி, சூ. சு. சரண்யா, மு. பூமதி உள்ளிட்டோர் ஒவ்வொரு செடியின் மருத்துவ, சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலன்கள் குறித்து மாணவர்களுக்கு விரிவாக விளக்கியனர். மாணவர்கள் கவனமாக கேட்டனர் மற்றும் பசுமை பேரியக்கம் குறித்த விழிப்புணர்வும் ஏற்பட்டது.
இந்த விழாவில் பள்ளி துப்புரவு பணியாளர் திரு. குமரனும், பொதுமக்களும் மாணவ மாணவிகளும் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் பணியை சிறப்பித்தனர்.