மாரண்டஅள்ளி, ஜூலை 30 | ஆடி 14 -
மாரண்டஅள்ளி பேரூராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ், பொதுமக்களின் கோரிக்கைகளை நேரடியாக கேட்டறியும் முகாம் பெருமளவில் நடைபெற்றது. முகாமுக்கு பேரூராட்சி தலைவர் எம்.ஏ. வெங்கடேசன் தலைமை வகித்து, குத்துவிளக்கேற்றி முகாமை தொடக்கி வைத்தார். இதில், பேரூராட்சி செயல் அலுவலர் திருமூர்த்தி, தாசில்தார் அசோக் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரேணுகாதேவி மற்றும் ஜோதிகணேசன், துணைத்தலைவர் கார்த்திகா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
முகாமின்போது பொதுமக்கள் தங்களுடைய இலவச வீட்டுமனை பட்டா, மகளிர் உரிமைத் தொகை, முதியோர் ஓய்வூதியம், குடும்ப அட்டை, வருங்கால வைப்பு நிதி, சமூக நலத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை துறை அலுவலர்களிடம் மனு அளித்து பதிவு செய்தனர். துணை தாசில்தார் எழில் மொழி, தலைமை எழுத்தர் சம்பத், கவுன்சிலர்கள், திமுக கிளைச் செயலாளர்கள், மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் முகாமில் பங்கேற்று, பொதுமக்களின் கோரிக்கைகளை பெற்றுக் கொண்டு தீர்வு கூறும் பணியில் ஈடுபட்டனர்.