தருமபுரி, ஜூலை 28 | ஆடி 12 -
தருமபுரி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில், முதலமைச்சர் விளையாட்டு போட்டி - 2025 இற்கான இணையதள பதிவு நடைபெற்று வருகிறது. இதை மக்களுக்கு விழிப்புணர்வாக அறிவிப்பதற்காக, தருமபுரி புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் Selfie Stand ஒன்று நிறுவப்பட்டது. இதை மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ் அவர்கள் இன்று திறந்து வைத்தார்.
Selfie எடுத்துகொண்டு சமூக ஊடகங்களில் பகிர்வதன் மூலம் மாணவர்களிடையே விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் ஆர்வம் அதிகரிக்குமென்று மாவட்ட நிர்வாகம் எதிர்பார்க்கிறது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., மாவட்ட விளையாட்டு அதிகாரி திரு. முருகேசன், இளைஞர் நல அலுவலர் திருமதி. சித்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.