தருமபுரி, ஜூலை 28 | ஆடி 12 -
தருமபுரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ், முதல்வர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் உதவியுடன், மாற்றுத்திறனாளிகளுக்கான முக்கிய சேவைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில், மொத்தம் ரூ.3,98,000 மதிப்பிலான செயற்கை அவயங்கள் (Artificial Limbs) வழங்கப்பட்டன. இதில் 8 மாற்றுத்திறனாளிகள் பயனடைந்தனர். அவர்களுக்காக தேவையான செயற்கை கைகள், கால்கள் மற்றும் சக்கர நாற்காலிகள் போன்றவை வழங்கப்பட்டன.
இந்த உதவியால் அவர்களின் சுயஉதவி திறனும், கௌரவமான வாழ்வாதாரம் மேம்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ் அவர்களே இவைகளை நேரில் வழங்கி, அவர்களை உற்சாகமுடன் வாழ வாழ்த்தினார். இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி. நந்தினி, ALIMCO நிறுவன பிரதிநிதி திரு. ஆனந்த், சமூக சேவையாளர் திரு. செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.