பாலக்கோடு, ஜூலை 8 (ஆனி 24, சுபகிருது) –
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகேயுள்ள ஈச்சம்பள்ளம் கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி ராமசாமிக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இதில் இரண்டாவது மகளான 17 வயது சிறுமி, கடந்த இரவு சாப்பிட்டு தூங்கச் சென்றுள்ளார். ஆனால் நள்ளிரவில் பெற்றோர் எழுந்து பார்த்தபோது, அவர் வீட்டில் இல்லாமல் காணப்பட்டதாக தெரிகிறது.
அதன்பின், உறவினர் வீடுகளிலும், அக்கம் பக்கத்திலும் தேடியும், சிறுமி எங்கு காணப்படவில்லை. இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் மாரண்டஅள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிறுமியை தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.