தருமபுரி, ஜூலை 8 (ஆனி 24, சுபகிருது) –
தருமபுரி மாவட்டம் பொம்மிடி ரயில் நிலையம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த இளைஞரின் உடலை ரயில்வே போலீசார் மீட்டனர். விசாரணையில், சத்தீஸ்கர் மாநிலம் பந்தனா கிராமத்தை சேர்ந்த அர்ஜித் என்ற இளைஞர் என்பது உறுதி செய்யப்பட்டது. மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த அவரது உறவினர்கள் உடலை சொந்த ஊருக்கு உடலை எடுத்து செல்ல முடியாத நிலை கூறியதால், மை தருமபுரி அமரர் சேவை அமைப்பினர் அவரின் உடலை எரிவாயு தகன மையத்தில், உறவினர்கள் முன்னிலையில் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர்.
இந்த நிகழ்வில் மொரப்பூர் ரயில்வே காவலர் தேவராஜ் மற்றும் மை தருமபுரி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருணாசலம் ஆகியோர் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர். இதுவரை மை தருமபுரி அமைப்பின் மூலம் 146 புனித உடல்களுக்கு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.