தருமபுரி, ஜூலை 6 (ஆனி 22) –
தருமபுரி மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் மொத்தம் 1,57,820 பயனாளிகளுக்கு ரூ.122.02 கோடி மதிப்பில் கல்வி, தொழில் மற்றும் சமூக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், பொருளாதாரத்தில் பின்தங்கிய சமூகங்களின் முன்னேற்றத்திற்கு பல்வேறு நலத்திட்டங்கள் தொடர்ச்சியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 2021-22 முதல் 2024-25 வரையிலான காலப்பகுதியில் கீழ்க்காணும் வகையில் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன:
🔹 மேற்படிப்பு கல்வி உதவித் தொகை – 46,692 மாணவ, மாணவிகளுக்கு ரூ.12.22 கோடி
🔹 பெண்கள் கல்வி ஊக்கத்தொகை – 60,505 மாணவிகளுக்கு ரூ.3.80 கோடி
🔹 மிதிவண்டிகள் வழங்கல் – 41,258 மாணவர்களுக்கு ரூ.20.05 கோடி
🔹 சலவை பெட்டிகள் (விலையில்லா) – 227 நபர்களுக்கு ரூ.13.75 லட்சம்
🔹 தையல் இயந்திரங்கள் (விலையில்லா) – 411 நபர்களுக்கு ரூ.10.74 லட்சம்
🔹 E-PATTA வழங்கல் – 1,892 நபர்களுக்கு ரூ.13.204 கோடி
🔹 TAMCO வாயிலாக சிறுபான்மையினருக்கு கடன் – 1,083 நபர்களுக்கு ரூ.6.953 கோடி
🔹 TABCEDCO வாயிலாக பிற்படுத்தப்பட்டோருக்கு கடன் – 5,752 நபர்களுக்கு ரூ.29.10 கோடி
இத்திட்டங்கள் மாவட்ட மக்களின் கல்வி மற்றும் வாழ்வாதார மேம்பாட்டிற்கு உறுதுணையாக அமைந்துள்ளதாகவும், அனைத்து தகுதி உள்ள நபர்களும் திட்டங்களில் பங்கேற்று பயன்பெற மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.