பாலக்கோடு, ஜூலை 23 | ஆடி 07 -
தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் நடிகர் சூர்யாவின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது நற்பணி மன்றம் சார்பில் சிறப்பு விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வு பாலக்கோடு அரசு போக்குவரத்து நிலையம் அருகே ஒன்றிய தலைவர் குமார் தலைமையில் நடைபெற்றது. விழாவில் மாவட்ட தலைவர் கார்த்திக், செயலாளர் விஜய், பொருளாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை எதிர்நோக்கிய ரசிகர்கள், பட்டாசு வெடித்து, கேக் வெட்டி மகிழ்ந்தனர்.
விழாவின் முக்கிய பகுதியாக, 50 பேர் பயன்பெறும் வகையில் 50 தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன. மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டதுடன், அன்னதானமும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர் ராஜா, துணைச் செயலாளர் ராமசந்திரன், நிர்வாகிகள் நஞ்சப்பன், சத்தியமூர்த்தி, வேலு உள்ளிட்டோர் மற்றும் பல ரசிகர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.