![]() |
Image source : google.com |
தருமபுரி, ஜூலை 23 | ஆடி 07 -
தமிழ்நாட்டைச் சேர்ந்த பௌத்த நபர்கள், 2025-2026 ஆம் ஆண்டில் நாக்பூர் தீக்ஷாபூமியில் விஜயதசமி தினத்தில் நடைபெறும் தம்ம சக்கர பரிவர்த்தன திருவிழாவிற்காக புனித பயணத்திற்கு செல்ல விரும்பின் அரசு மானிய உதவிக்கு விண்ணப்பிக்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு ரெ. சதீஷ், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின் கீழ், தமிழ்நாடு அரசு, புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய 150 பௌத்த நபர்கள் என ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.5,000/- வரை மானியத்தை நேரடியாக ECS முறையில் வழங்குகிறது. விண்ணப்பதாரர்கள், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்து கட்டணமின்றி விண்ணப்பப் படிவத்தை பெறலாம். மேலும், இணையதளம் www.bcmbcmz.tn.gov.in மூலமாகவும் பதிவிறக்கம் செய்யலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து, 30.11.2025க்குள் கீழ்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்: ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை – 600 005.