தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் லாட்ஜ் உள்ளிட்டவைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் பாதாள சாக்கடை திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட கால்வாயில் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரை செடிகளுக்கும் மரத்திற்கும் உபயோகிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஒகேனக்கல் - அஞ்செட்டி சாலையில் பாதாள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு அடிக்கடி கழிவுநீர் வெளியேறுவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவது உடன் சுகாதார சீர்கெடும் ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளனர். இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் பாதாள சாக்கடையிலிருந்து வெளியேறும் கழிவு நீரை சுத்தம் செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.