கடத்தூர், ஜூலை 09 (ஆனி 25) -
ஜூலை - 10 கடத்தூர் கோட்டம் இராமியணஹள்ளி 110/33/11 kv துணைமின் நிலையம், ஆர். கோபிநாதம்பட்டி 33/11kv துணைமின் நிலையம் மற்றும் கடத்தூர் 33/11kv துணைமின் நிலையம் ஆகிய மூன்று துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்ய இருப்பதால் அதன் சுற்று வட்டார பகுதிகளான இராமியணஹள்ளி, சிந்தல்பாடி, பசுவாபுரம், தென்கரைகோட்டை, காவேரிபுரம், பூதநத்தம் மற்றும் பொம்பட்டி, நாவலை, ஆண்டிப்பட்டி, ஜடையப்பட்டி, கர்த்தாங்குளம், ராமாபுரம் அதனை சுற்றியுள்ள பகுதிகளும், சுங்கரவள்ளி, ரேகடஹள்ளி, கடத்தூர், சில்லார அள்ளி, தேக்கல்நாயக்கன ஹள்ளி, புதுரெட்டியூர், நல்லகுட்ல ஹள்ளி, புட்ரெட்டிப்பட்டி, மணியம்பாடி, ஒடசல்பட்டி, ஒபிலிநாயக்கனஹள்ளி, புளியம்பட்டி, கதிர்நாயக்கன அள்ளி, இராணிமூக்கனூர், லிங்கநாயக்கன அள்ளி, மோட்டங்குறிச்சி, நத்தமேடு, இதனை சுற்றியுள்ள இதர கிராமங்களுக்கும் மாதாந்திர பராமரிப்பு 10.07.2025 வியாழன்கிழமை காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரை மின்சார நிறுத்தம் செய்யப்படம் என்று கடத்தூர் கோட்ட செயற் பொறியாளர் திரு.C.T. செந்தில்ராஜ் BE அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.