.jpg)
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட உங்கரான அள்ளி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில், தருமபுரி TO A.கொல்ல அள்ளி வழியாக பேருந்து சேவையின்மையால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன்னர், தருமபுரி - கொல்லஅள்ளி வழியாக 40 மற்றும் 47 என்ற எண்களில் குறைந்தது நாள் ஒன்றுக்கு 9 முறை பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் பின்னர், ஒகேனக்கல் பைப் லைன் பணிகள் காரணமாக இந்த சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டு, கடந்த ஒரு வருடமாக மட்டும் காலை மற்றும் மாலை 6 மணிக்கு இரண்டு முறை மட்டுமே மீண்டும் இயக்கப்படுகின்றது.
இதனால், பள்ளி செல்லும் மாணவர்கள், கூலி வேலைக்குச் செல்பவர்கள் மற்றும் அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். போதிய பேருந்து வசதியில்லாத காரணத்தால், இப்பகுதியில் வாழும் மக்கள் நகரப்புற பகுதிகளுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். பெருமளவு புகார்கள், மனுக்கள் தங்களது பகுதிகளில் இருந்து மாவட்ட நிர்வாகத்திடம் அனுப்பப்பட்டும் இதுவரை எளிய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.