பாலக்கோடு, ஜூலை 17 | ஆடி 01 -
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்திற்கு உட்பட்ட B.செட்டிஅள்ளி கிராமத்தில் உள்ள ஒரு தனியார் நிலத்தில் அமைந்துள்ள மின்கம்பம், பழுதடைந்த நிலையில் சரிந்து விழக்கூடிய நிலையில் காணப்படுகிறது. இந்த மின்கம்பம், மாரண்டஅள்ளி மற்றும் பெல்ரம்பட்டி செல்லும் முக்கிய சாலையின் ஓரத்தில் அமைந்துள்ளது. இந்த மின்கம்பம் எந்த நேரத்திலும் முறிந்து விழக்கூடிய நிலையில் உள்ளதோடு, அந்த வழியாக பயணிக்கும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் மாணவர்களுக்கு பெரும் அபாயமாக உள்ளது.
பல்வேறு நாட்களாக இவ்வழியாக செல்லும் அதிகாரிகள், பொதுமக்கள், ஊராட்சி நிர்வாகத்தினர் அனைவரும் இதனை கண்டிருந்தும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதாலேயே மக்கள் தங்கள் வேதனையை வலியுறுத்தி வருகின்றனர். உயிர் சேதம் ஏற்படும் முன், உடனடியாக மின்கம்பத்தை சீரமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.