தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள பேளாரஅள்ளி கிராமத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் மக்கள் சேவை முகாம் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த முகாம், தாசில்தார் அசோக் குமார் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரேணுகா மற்றும் ஜோதிகணேசன் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் பாலக்கோடு திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ஆனந்தன், மத்திய ஒன்றிய செயலாளர் முனியப்பன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி முகாமினை தொடங்கி வைத்தனர்.
முகாமில் மகளிர் உரிமைத் தொகை, பட்டா மாற்றம், புதிய குடும்ப அட்டை, ஆதார் திருத்தம், இலவச வீடு மற்றும் வீட்டுமனை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாக பெற அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர். இதில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர்.
முகாமில் காவல் உதவி கண்காணிப்பாளர் மனோகரன், இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் நாகராஜன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தேவேந்திரன், திமுக ஒன்றிய அவைத் தலைவர் ராஜாமணி, ஒன்றிய துணை செயலாளர் ஜோதி, கிளை செயலாளர் சின்ன பெரியண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முகாமில் அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்று, மக்கள் சேவையை முன்னெடுத்தனர்.