பொம்மிடி பேருந்து நிலைய நுழைவுவாயில் அருகே வாடிக்கையாளர்களும் பொதுமக்களும் தங்களது இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் போன்ற வாகனங்களை நேரடியாக நுழைவுப் பகுதியில் நிறுத்துவதால், பேருந்துகள் போக்குவரத்திற்கு பெரும் சிரமம் ஏற்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், பேருந்து நடத்துநர்களே இறங்கி வாகனங்களை நகர்த்த வேண்டிய சூழல் உருவாகி வருகிறது. சாலை ஓரமாக நடக்கும் பயணிகள், பள்ளி மாணவர்கள், பெண்கள், மூத்த குடிமக்கள் போன்றோர் தினசரி இந்த தொல்லையை எதிர்கொண்டு வருகிறார்கள். அதேபோல், மெயின் ரோட்டில் உள்ள இந்தியன் வங்கிக்கு வருபவர்கள் சாலையிலேயே வாகனங்களை நிறுத்துவதால் அங்கும் தினமும் போக்குவரத்து இடையூறு அதிகரித்து வருகிறது.
இதற்கான தீர்வாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தகவல் பலகைகள் (“வாகன நிறுத்த தடை”), போக்குவரத்து காவலர்கள் நியமனம், வங்கிகளுக்கான தனி வாகன நிறுத்தம், விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஆகியவற்றை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றனர். அதிகாரிகள் இக்கோரிக்கைகளை பரிசீலித்து, போக்குவரத்து சீரமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளனர்.