நல்லம்பள்ளி, ஜூலை 25 | ஆடி 09 -
நல்லம்பள்ளி வட்டம், ஏற்றபையனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட சந்தாரப்பட்டி கிராமத்தில், பொதுமக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நேர்த்தேக்க தொட்டி (Overhead Tank) சுத்தம் செய்யப்படாத நிலையில் உள்ளது. இந்த தொட்டியில் சேமிக்கப்படும் நீர் மயிர்த்துகள்கள், அடர்ந்த புழுக்கள், மங்கலான நிறம் போன்ற சுகாதாரமற்ற தோற்றத்தில் காணப்படுவதால், இதை பருகும் பொதுமக்களுக்கு அஜீரணம், வயிற்று வலி, தோல் நோய்கள் போன்ற உடல்நிலை பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இது குறித்து கிராம மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும், தொட்டியை சுத்தம் செய்யும் அல்லது குடிநீர் மாற்றுத் திட்டம் வகுக்கும் முயற்சி எடுக்கப்படவில்லை எனக் கூறுகின்றனர். இந்தப் பிரச்சனையை மாவட்ட நிர்வாகமும், ஊராட்சி நிர்வாகமும் அங்கீகரித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வலுத்துள்ளது.
.gif)

.jpg)