கடத்தூர், ஜூலை 25 | ஆடி 09 -
பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடத்தூர் மேற்கு மற்றும் கடத்தூரில் திமுக சார்பில் நடைபெறும், “ஓரணியில் தமிழ்நாடு” திட்டத்தின் கீழ் உறுப்பினர் சேர்க்கை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஊராட்சி வாரியாக BLA 2 மற்றும் BDA ஆகிய பொறுப்பாளர்கள் வீடு, வீடாக சென்று மக்களை நேரில் சந்தித்து, திமுக அரசின் சாதனைகள் மற்றும் மக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்களை எடுத்துக்கூறி உறுப்பினர் சேர்க்கையை விரைவாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செயல்பாடுகளுக்காக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் மற்றும் தருமபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பி. பழனியப்பன் அவர்கள் கலந்து கொண்டு, உறுப்பினர் சேர்க்கை பணிகளில் ஈடுபட்டு வரும் BLA 2 மற்றும் BDA-வினருக்கு முக்கியமான ஆலோசனைகள் வழங்கினார். உறுப்பினர் சேர்க்கை என்பது வெறும் கணக்காக அல்ல, மக்களுடன் நேரடி தொடர்பு ஏற்படுத்தும் ஒரு முக்கிய செயலாக இருக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு திமுக செயல்வீரரும் இதை முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்வில், கடத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் R.சிவபிரகாசம், ஒருங்கிணைப்பு குழுவினர் தே.வடிவேல், கடத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் T.நெப்போலியன், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி பார்வையாளர் OTN AC சி.சண்முகம், இளைஞரணி அமைப்பாளர் M.பச்சையப்பன், மற்றும் பல மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
.gif)

.jpg)
.jpg)