தருமபுரி, ஜூலை 30 | ஆடி 14 -:
பள்ளி மாணவர்களுக்கான 19 வயதுக்குட்பட்ட பிரிவிலும், கல்லூரி மாணவர்களுக்கான 25 வயதுக்குட்பட்ட பிரிவிலும் தடகளம், பாட்மின்டன், கால்பந்து, சதுரங்கம், நீச்சல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ஒன்றியம் மற்றும் மாவட்ட அளவில் நடத்தப்படுகின்றன. இப்பிரிவில் கலந்து கொள்ள வேண்டியவர்கள் 01.01.2007 பிறகு பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
15 முதல் 35 வயதுக்குட்பட்ட பொதுமக்களுக்கான பிரிவில் தடகளம், சிலம்பம், கூடையிழுப்பு, கரம், சதுரங்கம் போன்ற விளையாட்டுகள் தாலுக்கா அளவில் நடைபெறும். அரசு ஊழியர்களுக்காகவும், வயது வரம்பின்றி, தடகளம், கயிறு இழுத்தல், கூடைபந்து, கரம் போன்ற போட்டிகள் மாவட்ட அளவில் நடைபெற உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்காக அவர்களின் தன்மையை பொறுத்து தனித்தனியாக தடகளம் மற்றும் சதுரங்கம் போன்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இந்த முயற்சி ஊரக மற்றும் நகர்ப்புற மாணவர்களிடையே விளையாட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி, திறமைகளை மாநில மட்டத்தில் வெளிப்படுத்த ஊக்கமளிக்கப்படுகிறது.