தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி ஈ.பி. காலனியை சேர்ந்த பசுபதி (52) என்பவர், தனது மனைவி லட்சுமி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த பின்னர் தீவிர மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த (ஜூலை 7) அவர் எலிபேஸ்ட் வகை விஷத்தை உட்கொண்டு உயிரை மாய்த்துக்கொள்வதற்கு முயன்றுள்ளார்.
குடும்பத்தினர் இது குறித்து தெரிந்ததும் உடனடியாக அவரை மீட்டு, பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பசுபதி சற்று நேரத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த மாரண்டஅள்ளி போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
❗ உங்கள் மனதில் துக்கம், மன அழுத்தம், ஏமாற்றம் இருந்தால், தயங்காமல் யாரிடமாவது பகிருங்கள். உங்கள் உயிர் மதிப்புமிக்கது. உதவி தேவைப்பட்டால், 24x7 மணி நேர இலவச ஆலோசனை மையமான Sneha – 044-24640050 அல்லது 9152987821 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.