தருமபுரி, ஜூலை 8 (ஆனி 23)
தருமபுரி மாவட்ட தொழில் மையத்தில், ஜூலை 7 முதல் 9 வரை PMFME திட்டத்தின் கீழ் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி முகாம் (EDP Training) நடைபெற்றது. இந்த முகாம், EDII-TN (தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்) சார்பில் வழங்கப்பட்டது.
மொத்தம் 60 பயனாளிகள் இதில் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். முகாமை மாவட்ட தொழில் மைய மேலாளர் திரு. சுப்பையா பாண்டியன் துவக்கி வைத்தார். தொடர்ந்து, மாவட்ட வள அலுவலர் திருமதி சரண்யா மற்றும் EDII-TN மாவட்ட மேலாளர் திரு. கௌதம் சண்முகம் ஆகியோர் பங்கேற்று பயனாளிகளை உற்சாகப்படுத்தி உரையாற்றினர்.
பயிற்சியாளராக திரு. சங்கரலிங்கம் பங்கேற்று, தொழில் தொடக்கத்தில் எதிர்நோக்கும் சவால்கள், வாய்ப்புகள், நிதி ஆதரவு வழிமுறைகள், சந்தைப்படுத்தல் மற்றும் வணிக வளர்ச்சி குறித்த தலைப்புகளில் பாமர மக்களும் புரியும் வண்ணம் பயனுள்ள ஆலோசனைகளை வழங்கினார். பயிற்சியின் இறுதியில் அனைத்து 60 பயனாளிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த முகாம், புதிய தொழில் முனைவோர்களுக்கு மிகுந்த ஊக்கமும் பயனும் அளித்ததாக அமைந்தது.