அரூர், ஜூலை 30 | ஆடி 14 -
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள அண்ணாநகர் கிராமத்தில் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை (TVS) மற்றும் அரூர் கிளஸ்டர் சார்பில் பாரம்பரிய உணவுத் திருவிழா மற்றும் விளையாட்டு போட்டிகள் சிறப்பாக நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளையின் சமுதாய வளர்ச்சி அலுவலர் திரு. கா. ஆன்டனி, கிராம வளர்ச்சி அலுவலர் திருமதி R. சோனியா, மற்றும் மகளிர் குழுவினரும் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, பாரம்பரிய உணவுகள் உடலுக்கு தரும் நன்மைகள், இன்று பரவி வரும் சில முக்கிய நோய்களின் காரணங்கள் போன்றவை எளிமையான முறையில் கிராம மக்களுக்கு விளக்கப்பட்டன. மக்களுக்கு உணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி அமைக்கப்பட்டது.
மேலும், பெண்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக, அவர்கள் தயாரித்திருந்த பாரம்பரிய உணவுப் பொருட்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இவற்றுடன், கிராம மக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டு, வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இத்தகைய விழாக்கள் கிராமப்புற மக்களிடம் வாழ்வியலிலும், உணவியல் பண்பாட்டிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்து, சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் இடையாக இருந்தன.