மறுமலர்ச்சி ஜனதா கட்சியின் மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் தர்மபுரியில் மாநிலத் தலைவர் திரு. ச. ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள், அமைப்பு வலுவூட்டல் மற்றும் எதிர்வரும் செயல்திட்டங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், ஜூலை 27 ஆம் தேதி மாநில செயற்குழுக் கூட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறும் என்றும், கட்சி வளர்ச்சி, அடித்தள செயல் இயக்கங்கள், மக்களிடம் கட்சி இலக்குகளை கொண்டு சேர்க்கும் வழிகள் குறித்து விவாதிக்கப்படும் என்றும் திரு. ஜெயக்குமார் தெரிவித்தார். இந்த கூட்டங்கள் கட்சி வளர்ச்சிக்கான முக்கிய கட்டங்களை அமைக்கும் என்பதை அவர் வலியுறுத்தினார்.