தருமபுரி, ஜூலை 3 (ஆனி 18):
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள், சென்னை அடையாறு சாஸ்திரி நகர் நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் நடைபெற்ற நிகழ்வில், மாநிலம் முழுவதும் புதிதாக கட்டப்பட்ட ஊரக மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, தருமபுரி மாவட்டம் அதகப்பாடியில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையக் கட்டிடம் காணொளி காட்சி மூலம் திறக்கப்பட்டது. திறப்பு விழாவில், தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மேலும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்தினார்.
இந்த நிகழ்வில், தாய்மார்களுக்கு “தாய்சேய் நலப்பெட்டகம்” வழங்கப்பட்டது. அதன் பின்னர், சுகாதார நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்வில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஆ.மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ்.பி. வெங்கடேஷ்வரன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்ந்த இணை இயக்குநர் மரு. எம். சாந்தி, துணை இயக்குநர் (சுகாதாரம்) பூபேஷ், முன்னாள் எம்.எல்.ஏ. தடங்கம்.பெ.சுப்பிரமணி, பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.