பாப்பிரெட்டிப்பட்டி, ஜூலை 21 | ஆடி 05 -
தருமபுரி மாவட்டத்தின் முக்கிய நுழைவுவாயில்களில் ஒன்றான சேலம் மாவட்டத்திலிருந்து தீவட்டிப்பட்டி மற்றும் கே.மோரூர் வழியாக வரும் சாலை, வேப்பாடி ஆற்றின் அருகே தருமபுரி மாவட்ட எல்லையில் இணைகிறது. இந்த சந்திப்பிலிருந்து தொப்பூர், கடத்தூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய முக்கிய பகுதிகளுக்குச் செல்லும் சாலைகள் பிரிகின்றன.
இவ்வளவு முக்கியமான சந்திப்பில் திசைகாட்டும் அறிவிப்பு பலகை இல்லாதது, அந்த வழியாக பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் குழப்பத்திற்கு உள்ளாக காரணமாக இருந்தது. இந்த குறையை முதன்மையாக எடுத்துக்கொண்ட நாம் தமிழர் கட்சியின் கையூட்டு மற்றும் ஊழல் ஒழிப்பு பாசறையின் மாநில துணைத் தலைவர் திரு. பா. ஜெபசிங், சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் நேரில் புகார் தெரிவித்தார்.
இந்த புகாரை தொடர்ந்து, நெடுஞ்சாலைத் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அந்த சந்திப்பில் தற்காலிக திசைகாட்டி பலகையை அமைத்தனர். மேலும், விரைவில் நிரந்தர திசைகாட்டும் அறிவிப்பு பலகை நிறுவப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இந்த நடவடிக்கையின் மூலம், அந்த வழியாக பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தங்களது இலக்கை எளிதாக அடைய வழிவகை ஏற்பட்டுள்ளது.
இந்த மாற்றத்தை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்று, இதனைத் தொடந்து அனைத்து முக்கிய சாலைகளிலும் சரியான திசை குறிப்புகள் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.