சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்ற சிறப்பு விழாவில், சர்வதேச, தேசிய மற்றும் மாநில அளவிலான தற்காப்புக் கலை (Martial Arts) போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அரசு சார்பில் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த விழாவின் சிறப்பம்சமாக, தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் மேடையில் இடம்பெரும் வாய்ப்பு பெற்றனர். தமிழர் தற்காப்புப் பயிற்சி பள்ளியைச் சேர்ந்த
இவர்கள் தற்காப்புக் கலை துறையில் பல்வேறு மட்டங்களில் பதக்கங்களை வென்று, தங்கள் திறமையால் அனைவரையும் கவர்ந்துள்ளனர்.
இந்நிகழ்வில் துணை முதல்வர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் நேரில் வந்து மாணவர்களிடம் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினர். இந்த நிகழ்வு மாணவர்களுக்கு மட்டுமல்ல, மாவட்ட அளவில் விளையாட்டு துறையில் இடம்பிடிக்க விரும்பும் இளம் விளையாட்டு வீரர்களுக்கும் மிகப்பெரிய ஊக்கமாக அமைந்தது.
தருமபுரி மாணவர்கள் இந்தளவுக்கு வளர்வது, அந்த மாவட்டத்தின் விளையாட்டு பயிற்சி நிலைமை மற்றும் பள்ளிகளில் வழங்கப்படும் ஆதரவை காட்டுகிறது. தற்காப்புப் பயிற்சிக்கு அரசாங்கம் மேலும் முக்கியத்துவம் அளித்து, இத்தகைய திறமைகளை வளர்க்க வேண்டும் என்பது விளையாட்டு வட்டாரத்தின் எதிர்பார்ப்பு.