பாலக்கோடு, ஜூலை 25 | ஆடி 09 -
இந்த முகாமுக்கு, பாலக்கோடு மத்திய ஒன்றிய செயலாளர் முனியப்பன் தலைமையிலிருந்தார். இதில், திமுக தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கை பணிகள் தொடர்பாக நேரில் ஆய்வு செய்தார்.
மேலும், BDA மற்றும் BLA-2 பிரிவுகளின் நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், உறுப்பினர் சேர்க்கையை வீடு, வீடாக சென்று செய்வதற்கான திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. கழகத் தலைவர் அவர்களின் ஆணைப்படி, 40% உறுப்பினர் சேர்க்கை இலக்கை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்றும், அதற்காக அரசின் சாதனைகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களை பொதுமக்களுக்கு விளக்க வேண்டும் என்றும் முக்கிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில், பாலக்கோடு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அரியப்பன், பார்வையாளர் பரணி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முத்துசாமி, BDA மற்றும் BLA-2 உறுப்பினர்கள், முக்கிய நிர்வாகிகள் என பலர் பங்கேற்றனர். உற்சாகமாக நடைபெற்ற இந்த முகாம், உறுப்பினர் சேர்க்கை பணிகளை மாவட்டத்தில் தீவிரமாக முன்னெடுக்க அத்தொடக்கமாக அமைந்துள்ளது.