பென்னாகரம், ஜூலை 19 | ஆடி 03 -
தருமபுரி மாவட்டம், பென்னாகரம், தனியார் திருமண மண்டபத்தில் திமுக கல்வியாளர்கள் அமைப்பின் சார்பில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எழுதிய "தேசிய கல்விக் கொள்கை 2020 – மதயானை" என்ற நூலை மையமாகக் கொண்டு திறனாய்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பட்டதாரி ஆசிரியர் பெருமாள் தலைமை வகித்தார். தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் துணைத் தலைவர் லட்சுமணன் வரவேற்று உரையாற்றினார். நிகழ்வில் தலைமை ஆசிரியர்கள் வீரமணி, ரவிச்சந்திரன், ஆசிரியர்கள் பாலமுருகன், ஸ்டாலின் கந்தசாமி, எழுத்தாளர் கௌரிலிங்கம் ஆகியோர் முன்னிலையில் இருந்தனர்.
கருத்தரங்கினை திராவிட அரசு ஊழியர் ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் முனியப்பன் தொடங்கி வைத்தார். நிகழ்வின் முக்கிய உரையை பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் தமிழ் பிரபாகரன் வழங்கினார். முக்கிய உரையில், திராவிட இயக்க சிந்தனையாளர் மற்றும் எழுத்தாளர் மதிமாறன், “தேசிய கல்விக் கொள்கை 2020” என்ற நூலின் உள்ளடக்கம், அதன் மூலமாக தமிழ்நாட்டின் தனித்துவக் கல்விக் கொள்கை முறைமையை அழித்து மாணவர்களை தவறான பாதையில் இட்டுச் செல்லும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது” எனக் குறிப்பிடினார்.
நிகழ்ச்சியின் முடிவில் தமிழாசிரியர் சுப்பிரமணி நன்றி கூறினார். நிகழ்வை கவிஞர் சந்தோஷ் குமார் தொகுத்து வழங்கினார். இந்த கருத்தரங்கில் ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், பச்சையப்பன், நகரச் செயலாளர் வீரமணி, மேலும் பல ஆசிரியர்கள், கல்வியாளர்கள், திமுகவினர் உள்ளிட்டோர் திரளாகக் கலந்து கொண்டனர்.