மொரப்பூர், 19 | ஆடி 03 -
தருமபுரி மாவட்டம் மொரப்பூர் வனச்சரகம் மற்றும் அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) இணைந்து அரூர் காப்புக்காட்டில் இன்று ஒரு முக்கிய சுற்றுச்சூழல் சுத்தம் பணியை மேற்கொண்டனர்.
சமூகவிரோதிகளால் வனப்பகுதியில் தூக்கி எறியப்பட்ட தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழிகள் பெருமளவில் அகற்றப்பட்டன. இந்த சுத்தம் நடவடிக்கையில் மொரப்பூர் வனச்சரக பணியாளர்கள், அரூர் NSS தன்னார்வலர்கள் மற்றும் அரூர் பேரூராட்சி பணியாளர்கள் இணைந்து பங்களித்தனர்.
இந்நிகழ்வை அரூர் அரசு கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் திரு. கோபிநாத் மற்றும் வனத்துறை சார்பில் திரு. விவேகானந்தன் ஒருங்கிணைத்தனர். இத்தகைய நடவடிக்கைகள், இயற்கையை பாதுகாக்கும் பணியில் பொதுமக்களின் பங்களிப்பு எவ்வளவு முக்கியமெனும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, மாணவர்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய பொறுப்புணர்வையும் வளர்க்கின்றன.