அரூர், ஜூலை 25 | ஆடி 09 -
தருமபுரி மாவட்டம், அரூர் ஒன்றியம், சிட்லிங் ஊராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் நேரில் முகாமினை பார்வையிட்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். முகாமில், நலத்திட்ட உதவிகள் வேண்டி மனு அளித்த பயனாளிகளுக்கு, உடனடியாக முதலமைச்சர் காப்பீட்டு அட்டைகள், வருவாய் சான்றிதழ்கள், தொழில் திட்ட உதவிகள், வீட்டுமனைக் கையெழுத்து ஆணைகள் போன்றவை வழங்கப்பட்டன.
மேலும், முகாமின் போது பொதுமக்கள் வைத்திருந்த முக்கிய கோரிக்கையான கோட்டப்பட்டி முதல் சிட்லிங் வரை சேதமடைந்த சாலை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுரையிட்டு, “வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நலனுக்காக சாலை விரைவில் சீரமைக்கப்படும்” என உறுதியளித்தார். முகாமில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக விரைவான சேவை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக மருத்துவ முகாமும் நடைபெற்றது. இந்த முகாமின்போது மக்களுக்கு 15க்கும் மேற்பட்ட துறைகள் சார்ந்த சேவைகள் ஒரே இடத்தில் வழங்கப்பட்டன.
.gif)

.jpg)