Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு.


கடத்தூர், ஜூலை 12 (ஆனி 27):

தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் நடைபெற்று வரும் முக்கிய திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


இந்நிலையில், புட்டிரெட்டிப்பட்டி ஊராட்சியில், மாரிமுத்து நிலம் முதல் இரயில்வே பாலம் வரை நடைபெற்று வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ₹12.60 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் கால்வாய் அகலப்படுத்தும் பணியை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு, முன்னேற்ற நிலையை ஆய்வு செய்தார்.


தொடர்ந்து,

  • பசுவாபுரம் ஊராட்சியில், மாநில நிதிக்குழு நிதியுதவியில் ₹4.82 லட்சம் மதிப்பீட்டில் கந்தகவுண்டனூர் ஏரியை புனரமைக்கும் சிறுபாசன பணி,

  • கோபிசெட்டிப்பாளையம் ஊராட்சியில், ₹5.71 லட்சம் மதிப்பீட்டில் நாய்க்கன் ஏரி புனரமைக்கும் பணிகள்,


நடைபெற்று வருவதையும் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு, பணிகளின் தரம், முன்னேற்றம் மற்றும் பூர்த்தி காலக்கெடுக்களை அலுவலர்களிடம் கேட்டறிந்தார். அவரது ஆய்வின்போது, இந்த பணிகள் தரமுடன், நேரத்தில் முடிக்கப்பட வேண்டும் என்றும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வர வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.


இந்த ஆய்வில் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு. விமல், வட்டார வளர்ச்சி அலுவலர் திரு. சுருளிநாதன் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies