தருமபுரி, ஜூலை 27 | ஆடி 11 -
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் மற்றும் மக்கள் மனதில் என்றும் ஒளிரும் விஞ்ஞானி மேதகு டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பத்தாம் ஆண்டு நினைவு நாளை, தருமபுரியைத் தலைமையிடமாகக் கொண்ட “மை தருமபுரி” அமைப்பினர் மரியாதையுடன் அனுசரித்தனர்.
2020க்குள் இந்தியாவை அறிவு வல்லரசாக மாற்றும் கனவுடன் செயலாற்றிய கலாம் அவர்கள், மாணவர்களின் ஊக்கமளிக்கக் கூடிய வழிகாட்டியாகவும், இந்தியாவின் ஏவுகணை திட்டங்களில் முக்கிய பங்காற்றிய நாட்டு தலைவர் என்றும் பெருமைபெற்றவர். “இந்தியாவின் ஏவுகணை நாயகன்”, “மக்கள் ஜனாதிபதி”, “விஞ்ஞானி கலாம்”, “பேராசிரியர் கலாம்” போன்ற பல பட்டங்களால் புனையப்பட்ட இவர், ஷில்லாங்கில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றும் போது தனது கடைசி மூச்சை விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நினைவு நாளை முன்னிட்டு, மை தருமபுரி அமைப்பின் தலைவர் திரு. சதீஸ் குமார் ராஜா, செயலாளர் தமிழ்செல்வன், அமைப்பாளர்கள் செந்தில், கிருஷ்ணன், சையத் ஜாபர், தன்னார்வலர்கள் குணசீலன், கோகுல்ராஜ், காதர் ஆகியோர் கலாம் அவர்களின் உருவபடத்திற்கு மலர்வளையம் சூட்டியும், மவுன அஞ்சலி செலுத்தியும் மரியாதை செலுத்தினர்.