தருமபுரி, ஜூலை 30 | ஆடி 14 :
தமிழ் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றும் நபர்களின் பங்களிப்பை மதித்து, தமிழக அரசு வழங்கும் “தமிழ்ச்செம்மல் விருது” பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று மாவட்ட ஆட்சியர் திரு. ர. சதீஷ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த விருதில் ரூ. 25,000 பணப்பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். 2025ஆம் ஆண்டுக்கான விருதுக்கு, தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் வளர்ச்சிக்காகச் செயல்படும் ஆளுமைகள் விண்ணப்பிக்கலாம்.
விருது விவரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவங்களை www.tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தங்கள் விபரங்களை கீழ்கண்ட முகவரிக்கு 25.08.2025 தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்:
முகவரி:
தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் தொடர்புத்துறை,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
தருமபுரி – 636705