தருமபுரி, ஜூலை 30 | ஆடி 14 -
தருமபுரி மாவட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நாகாவதி நீர்த்தேக்கத்தில் மீன்பிடி உரிமைகளை 5 ஆண்டுகள் காலத்திற்கு மீன்பிடி குழுக்களுக்கு வழங்குவதற்காக மின்னணு ஒப்பந்தப்பதிவுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் மின்னணு ஏல அமைப்பின் மூலம் நடைபெறும் இந்த ஒப்பந்தப்பதிவுகளை www.tntenders.gov.in என்ற இணையதளத்தில் பார்வையிட்டு, அதற்கான படிவங்களை பதிவிறக்கம் செய்து, விண்ணப்பிக்க முடியும். இது தொடர்பான முழுமையான விவரங்களும், ஏல அறிவிப்பு எண்: 19494/எப்3/24-2 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மின்னணு ஒப்பந்தப்பதிவு மற்றும் ஏல நடைமுறை 06.08.2025 அன்று தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெறும். ஏலம் தொடர்பான சந்தேகங்களுக்கு inlandfisheries15@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி வழியாக தொடர்பு கொள்ளலாம். மேலும், ஏல அறிவிப்பில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் அவை www.tntenders.gov.in இணையதளத்தில் மட்டுமே அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவலுக்காக, தருமபுரி மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவகம், 1/165A, ராமசாமி கோவில்தெரு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், தருமபுரி – 636705 என்ற முகவரியிலும், தொலைபேசி எண் 04342-232311-ல் தொடர்பு கொள்ளலாம்.