தருமபுரி, ஜூலை 30 | ஆடி 14:
தருமபுரி மாவட்ட வருவாய் அலுவலகம் சார்பில், அரசு பயன்பாட்டில் இருந்த TN29G0289 எனும் எண்ணிலையிலான ஜீப் வாகனம், தற்போது சேவை முடிந்து, ₹27,000 மதிப்பீட்டில் கழிவு வாகனமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனத்திற்கான ஏல நிகழ்வு வருகிற 05.08.2025 (செவ்வாய்கிழமை) அன்று காலை 11.00 மணிக்கு, புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.
விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள வாகனத்தைப் பார்வையிட்டு, ஏல விதிமுறைகளின்படி விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். வாகனத்தின் தற்போதைய நிலை மற்றும் தொடர்புடைய விபரங்கள் கோரலாம் என அறிவிக்கப்படுள்ளது, மேலும் விவரங்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலகத்தைத் தொடர்புகொள்ளலாம், என மாவட்ட ஆட்சியர் திரு. ர. சதீஷ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளனர்.