குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME) வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு வழங்கும் ஊக்குவிப்பு மானியங்களை தருமபுரி மாவட்ட நிறுவனங்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.
முக்கிய ஊக்குவிப்பு மானியங்கள் பின்வருமாறு:
-
காப்புரிமை / முத்திரை பதிவு / புவிசார் குறியீட்டிற்கான ஊக்கதொகை:
-
காப்புரிமைக்கு 75% மானியம் (அதிகபட்சம் ₹3 லட்சம்)
-
முத்திரை பதிவு மற்றும் புவிசார் குறியீட்டிற்கு 50% மானியம் (அதிகபட்சம் ₹1 லட்சம்)
-
-
முத்திரை தாள் மற்றும் பதிவு கட்டண மானியம்:
-
பின்தங்கிய பகுதிகளில் நிலம் வாங்கும் MSME நிறுவனங்களுக்கு 50% வரை மானியம்
-
-
எரிசக்தி தணிக்கை மானியம் (PEACE):
-
எரிசக்தி கணக்கீடு செலவில் 75% (அதிகபட்சம் ₹1 லட்சம்)
-
புதிய இயந்திரங்கள் வாங்கும் MSME-க்களுக்கு 50% மானியம் (அதிகபட்சம் ₹10 லட்சம்)
-