தருமபுரி மாவட்டத்தில், வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில், விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட அளவிலான வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு முகாம் வருகிற ஜூலை 9ஆம் தேதி, நல்லம்பள்ளி வட்டம், இண்டூர் உள்வட்டம், சோமனஅள்ளி கிராமத்தில் நடைபெற உள்ளது.
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் வழங்கிய தகவலில், இந்த முகாமின் மூலம் விவசாயிகள், இயந்திரங்களை இயக்கும் முறைகள், பராமரிப்பு நடைமுறைகள், தவிர்க்க வேண்டிய செயல்கள் மற்றும் புதிய கருவிகள் குறித்து நேரடியாக விளக்கம் பெறலாம் என தெரிவித்தார்.
பல்வேறு வேளாண் கருவிகள் காட்சியில் இடம் பெறவுள்ளன:
-
பல்வகை கதிரடிக்கும் இயந்திரங்கள்
-
தென்னை மட்டை தூளாக்கும் கருவி
-
மருந்து தெளிக்கும் டிரோன் போன்றவை இயக்கி காட்டப்படும்.
மேலும், தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் பங்கேற்று விவசாயிகளுக்கு நேரடி விளக்க உரை வழங்கும். இம்முகாமில் பங்கேற்கும் ஆர்வமுள்ள இளைஞர்கள், திறன் மேம்பாட்டு பயிற்சிகளில் சேர்ந்து பயனடைய ஊக்குவிக்கப்படுவார்கள். மாவட்டத்தின் அனைத்து விவசாயிகளும் இந்த “வேளாண் இயந்திரங்கள் மேளா”வினில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.