பாலக்கோடு, ஜூலை 20 | ஆடி 03 -
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் உள்ள மாணவர்கள், மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் சிறப்பான சாதனை படைத்துள்ளனர். சென்னையில் தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் நடத்தும் மாநில சிலம்பம் போட்டியில், பாலக்கோடு ஈசன் சிலம்பம் இன்டர்நேஷனல் பயிற்சி பள்ளியைச் சேர்ந்த ஐந்து வீரர்கள் பங்கேற்றனர்.
இந்தப் போட்டியில் மாணவர் வியாஷ் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றார். அதேபோல், தக்ஷன்யா, பீஷ்மா, தக்ஷனேஷ் மற்றும் பிரகதீஸ்வரன் ஆகியோர் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கங்களை வென்றனர். இந்த ஐந்து வீரர்களும் வருகிற நவம்பர் 16ஆம் தேதி இலங்கையில் நடைபெறவுள்ள இன்டர்நேஷனல் ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
இத்தகைய சாதனைக்கு, மாணவர்களும் அவர்களது பயிற்சியாளர் முகேஷ்தமிழ் அவர்களும், பாலக்கோடு காவல் துணைக் கண்காணிப்பாளர் (D.S.P) திரு. மனோகரன் அவர்களால் நேரில் அழைத்து பாராட்டப்பட்டனர். நிகழ்வின்போது முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எம்.ஜி. சின்னசாமி மற்றும் பெற்றோர்கள் உடனிருந்தனர்.