Type Here to Get Search Results !

தருமபுரியில் ஒக்கலிக கவுடர் நலச் சங்கம் நடத்திய மாணவர் ஊக்கத்தொகை வழங்கும் விழா.


தருமபுரி, ஜூலை 12 (ஆனி 29) -

தருமபுரி மாவட்ட ஒக்கலிக கவுடர் நலச் சங்கத்தின் சார்பில், 2024–2025 ஆம் ஆண்டிற்கான 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான பரிசளிப்பு விழா மற்றும் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா, மாமன்னன் கெம்பேகவுடாவின் 516வது ஜெயந்தி விழாவுடன் இணைந்து தருமபுரி I.M.A. ஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.


இவ்விழாவில் மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகையும், விருதுகளும் வழங்கப்பட்டன. விழாவின் கௌரவத் தலைவராக ஆறுமுக சாமி பங்கேற்று, சிறந்த சாதனைகள் புரிந்த மாணவர்களை நேரில் பாராட்டினார்.


இந்த நிகழ்வில், மாநிலத் தலைவர் வெள்ளிங்கிரி, மாநிலச் செயலாளர் ஐனகரன், மாநில பொருளாளர் பிரகாஷ், மாநில மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இரத்தினவேல், மாவட்ட தலைவர் மயில்சாமி, மாநில செயற்குழு உறுப்பினர் தண்டபாணி, மாவட்ட பொருளாளர் தங்கராஜ், வழக்கறிஞர் முரளி உள்ளிட்ட மாநில மற்றும் மாவட்ட ஒக்கலிக கவுடர் நலச் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies