இண்டூர், ஜூலை 24 | ஆடி 08 -
தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகேயுள்ள நடப்பனஹள்ளி கிராமத்தில் அமைந்துள்ள பெரிய கருப்பசாமி கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு வினோத வழிபாடுகள் நடத்தப்பட்டதைப்பற்றி பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஆச்சரியமும் கவலையும் எழுந்துள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் ஆடி அமாவாசை நாளன்று நடைபெறும் வழக்கமான சிறப்பு பூஜைகள், அபிஷேகங்களுக்கு மாறாக, இந்த ஆண்டில் பூசாரி கோவிந்தன் என்பவர் மீது 108 கிலோ மிளகாய் தூள் கலந்த கரைச்சலை ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பாலை அபிஷேகமாக ஊற்றி, அவரை "அருள்வாக்கு" கூறவைத்தனர்.
அதுமட்டுமல்லாது, பூசாரியின் முன் மதுபானங்கள், சுருட்டுகள் படைத்துப் பக்தர்கள் வழிபாடு செய்ததோடு, குடும்ப பிரச்சனைகள், கடன்கள், வியாபாரத் தடைகள் அகல வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஆடு, கோழிகள் பலி அளிக்கப்பட்டன. இடத்தில் உணவுப் பணியும் நடைபெற்று, பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.