Type Here to Get Search Results !

பாலக்கோடு ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளி கூட்டரங்கில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்.



பாலக்கோடு, ஜூலை 19 | ஆடி 03 -

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு ஸ்ரீவித்யாமந்திர் பள்ளி கூட்டரங்கில்  உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் ஜெர்த்தலாவ் ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.


இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரேணுகா, ஜோதிகணேசன், தாசில்தார் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாலக்கோடு திமுக தெற்கு  ஒன்றிய செயலாளர் ஆனந்தன், மத்திய ஒன்றிய செயலாளர்  முனியப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு  குத்துவிளக்கு ஏற்றி முகாமினை  துவக்கி வைத்தனர்.


இம்முகாமில் அனைத்து துறையை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர். இதில் மகளிர் உரிமைத் தொகை, பட்டா மாறுதல், புதிய குடும்ப உறுப்பினர் அட்டை, ஆதார் திருத்தம், இலவச வீட்டுமனை, இலவச வீடு,  உள்ளிட்ட கோரிக்கைகள் வேண்டி 400 க்கும் மேற்பட்டோர் பொதுமக்கள் மனு  அளித்தனர்.


இம்முகாமில் காவல் உதவி கண்காணிப்பாளர் மனோகரன், இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் நாகராஜன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தேவேந்திரன், திமுக ஒன்றிய அவைத் தலைவர் ராஜாமணி, ஒன்றிய துணை செயலாளர் ஜோதி, அழகுசிங்கம் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies