Type Here to Get Search Results !

பசுவாபுரத்தில் "உங்களுடன் ஸ்டாலின்" சிறப்பு முகாம் – ஒரே நாளில் 1882 மனுக்கள் பெறப்பட்டது.


கடத்தூர், ஜூலை 22 | ஆடி 06 -

தர்மபுரி மாவட்டம், கடத்தூர் ஒன்றியத்தில் உள்ள பசுவாபுரம் சமுதாய கூட திருமண மண்டபத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து பொதுமக்களிடமிருந்து நேரில் மனுக்கள் பெற்றனர்.


மருத்துவம், மகளிர் உரிமைத் தொகை, டிஜிட்டல் சேவை, வருவாய், சமூக நலன், விவசாயம், மின்சாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட 13 அரசு துறைகள் இந்த முகாமில் பங்கேற்றன. சிந்தல்பாடி, பசுவாபுரம், வகுத்துப்பட்டி, மேலகுப்பம், ஆவல்சந்தை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.


முகாமின் முக்கிய அம்சமாக, மக்கள் தங்களது சான்றிதழ் கோரிக்கைகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி உதவித்தொகை விண்ணப்பங்கள், வீட்டுவசதி, விவசாய உதவிகள், மின் இணைப்பு பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நேரில் அளித்தனர்.


மொத்தமாக 1882 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில் பல மனுக்களுக்கு இடத்திலேயே தீர்வு வழங்கப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. இந்த முகாம், பொதுமக்கள் மற்றும் அரசு துறைகளுக்கு இடையிலான நேரடி தொடர்பை ஏற்படுத்தியதோடு, மக்கள் நலனில் அரசின் செயல்பாடுகள் எவ்வளவு முக்கியமெனவும் எடுத்துக்காட்டாக அமைந்தது.


- செய்தியாளர் நந்தகுமார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies