Type Here to Get Search Results !

ஜக்கசமுத்திரத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் – 500க்கும் மேற்பட்டோர் கோரிக்கை மனு அளிப்பு.


பாலக்கோடு, ஜூலை 22 | ஆடி 06 -

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகேயுள்ள ஜக்கசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில், 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் தேவைகள் தொடர்பான மனுக்களை அளித்து பயன்பெற்றனர். இந்த முகாம், வட்டார வளர்ச்சி அலுவலர் தனலட்சுமி தலைமையில் நடைபெற்றது. முகாமில், காரிமங்கலம் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் எம்.வீ.டி. கோபால், மாநில விவசாய அணி துணைச் செயலாளர் சூடப்பட்டி சுப்ரமணி, மாவட்ட விவசாய அணி குமார், நிர்வாகிகள் சிவாஜி, முனுசாமி உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர்.

தருமபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் பழனியப்பன், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். பின்னர், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை நேரில் பெற்றார். முகாமில், மகளிர் உரிமைத் தொகை, பட்டா மாறுதல், புதிய குடும்ப உறுப்பினர் சேர்க்கை, ஆதார் திருத்தம், இலவச வீடு மற்றும் வீட்டுமனை உள்ளிட்ட தேவைகள் தொடர்பான மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.


முகாமில் காவல் ஆய்வாளர் வெங்கட்ராமன், வட்டார வளர்ச்சி உதவி அலுவலர் சரத்குமார், ஊராட்சி செயலாளர் சரவணன், திமுக நிர்வாகிகள் ஜே.எம்.சக்தி, கனேசன், சலீம், யுவராஜ், விஜய் மற்றும் அனைத்து துறையைச் சேர்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு மக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர். மக்கள் நலத்தை முன்னோக்கி கொண்டு செயல்படும் தமிழக அரசின் திட்டங்களில் ஒன்றான 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம், அரசுத் திட்டங்களை நேரடியாக மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பயனுள்ள முயற்சியாக அமைந்துள்ளது. 


- செய்தியாளர் வேலு.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies