பென்னாகரம், ஜூலை 29 | ஆடி 13 -
தர்மபுரி மாவட்டத்தின் பென்னாகரம் தேர்வுநிலை பேரூராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம் சிறப்பாக நடைபெற்றது. 1 முதல் 12 வரை உள்ள வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து 24 துறைகளை சேர்ந்த பல்வேறு பிரச்சனைகள் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டன.
இந்த முகாமில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி பங்கேற்றார். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், சில பயனாளர்களுக்கு பட்டா பெயர் மாற்றம், மின்சாரம் பெயர் மாற்றம், சொத்து வரி திருத்தம் உள்ளிட்ட உத்தரவு ஆவணங்களை மாவட்ட துணை கலெக்டர் நேரில் வழங்கினார்.
முகாமில் தாட்கோ மாவட்ட மேலாளர் மாதேஷ், பேரூராட்சி தலைவர் வீரமணி, செயல் அலுவலர், வருவாய் ஆய்வாளர், பேரூராட்சி துணைத் தலைவர் வள்ளியம்மாள் பவுன்ராஜ், திமுக நகரச் செயலாளர் பச்சையப்பன், பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பல துறை அதிகாரிகள் கலந்துகொண்டு, மனுக்களை பெற்றுத் தேர்வுக்குட்படுத்தினர். இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினர். சமூக நலனில் அரசின் நேரடி நடவடிக்கையை மக்கள் பாராட்டினர்.