பாலக்கோடு, ஜூலை 29 | ஆடி 13 -
பாலக்கோடு ஒன்றியம் கரகதஅள்ளி ஊராட்சி சமுதாய கூடத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் சிறப்பாக நடைபெற்றது. இம்முகாமை திமுக தெற்கு ஒன்றியச் செயலாளர் ஆனந்தன் தலைமையில் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். முகாமில் பாலக்கோடு தாசில்தார் அசோக் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ரேணுகாதேவி, அரசு வழக்கறிஞர் பி.கே. முருகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், ஒன்றிய அவைத் தலைவர் ராஜாமணி, முன்னாள் ஒன்றிய குழுத் தலைவர் நாகராஜன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில், பொதுமக்கள் இலவச வீட்டுமனை பட்டா, மகளிர் உரிமைத்தொகை, முதியோர் ஓய்வூதியம், குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு தேவைகளைத் தெரிவித்து மனுக்கள் அளித்தனர். அனைத்து துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் முகாமில் பங்கேற்று மனுக்களை பெற்றனர் மற்றும் உரிய பரிசீலனைக்குப் பின் தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
திமுக கிளைச் செயலாளர்கள் சிவசங்கரன், முருகன், நேரு, பாஸ்கரன், கிருஷ்ணமூர்த்தி, ராஜேந்திரன், ராஜா, மாதன், போத்தராஜ் மற்றும் ஊராட்சி செயலாளர் சண்முகம் உள்ளிட்ட பலர் முகாமில் கலந்துகொண்டனர்.