பாப்பாரப்பட்டி, ஜூலை 24 | ஆடி 08 -
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பேரூராட்சியின் எல்லைக்குட்பட்ட 1 முதல் 8 வரை உள்ள வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்களுக்காக 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த முகாமில் பொதுமக்களிடமிருந்து மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், ஒன்பது துறைகளுக்கான பல்வேறு சேவைகளுக்கான மனுக்கள் பெறப்பட்டன.
முகாமை தாட்கோ மாவட்ட மேலாளர் மாதேஷ் மற்றும் பேரூராட்சி தலைவர் பிருந்தா இணைந்து துவக்கி வைத்தனர். மேலும் செயல் அலுவலர் ஆயிஷா, வருவாய் ஆய்வாளர் சுஜாதா, பேரூராட்சி துணைத் தலைவர் மல்லிகா, திமுக நகரச் செயலாளர் சண்முகம், முன்னாள் பேரூராட்சி தலைவர் திருவேங்கடம் உள்ளிட்ட பலர் முகாமில் கலந்து கொண்டு மனுக்களைப் பெற்றனர்.
இத்துடன் பேரூராட்சி கவுன்சிலர்கள் அண்ணாமலை, பத்மா, தமிழ்ச்செல்வன், சரிதா, மாலா, ஹாஜிராபீ, விசுவநாதன், கல்பனா, தர்மலிங்கம், பூங்குழலி பிரகாஷ் உள்ளிட்டோர் மற்றும் பல துறை அதிகாரிகள் கலந்து கொண்டு, கிடைத்த மனுக்கள் மீது உரிய பரிசீலனை செய்ததுடன், பிரச்சனைகளுக்கு விரைவான தீர்வு காண பரிந்துரைகளை வழங்கினர். முகாமில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று, தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயனடைந்தனர்.