Type Here to Get Search Results !

பி.செட்டி அள்ளி கிராமத்தில் "உங்களுடன் ஸ்டாலின்" சிறப்பு முகாம் நடைபெற்றது.


பாலக்கோடு, ஜூலை 24 | ஆடி 08 -


பாலக்கோடு ஒன்றியம், பி.செட்டி அள்ளி ஊராட்சி சமூக கூடத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் ஜூலை 25ஆம் தேதி நடைபெற்றது. திமுக மத்திய ஒன்றியச் செயலாளர் முனியப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், முன்னாள் அமைச்சர் மற்றும் தருமபுரி மேற்கு மாவட்ட திமுகச் செயலாளர் பழனியப்பன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்தார்.


முகாமில் உரையாற்றிய அவர், பொதுமக்களின் குறைகளை நேரில் கேட்டு உடனடி தீர்வு வழங்கும் நோக்கில் இந்த திட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்டதாக தெரிவித்தார். கடந்த வாரம் சிதம்பரத்தில் துவக்கப்பட்ட இந்த முகாம்கள், ஆகஸ்ட் மாதம் வரை மூன்று கட்டங்களாக தமிழகமெங்கும் 10 ஆயிரம் இடங்களில் நடைபெற உள்ளன என்றார். மேலும், இந்த முகாம்களில் மக்கள் இலவச வீட்டுமனை பட்டா, மகளிர் உரிமைத் தொகை, முதியோர் ஓய்வூதியம், குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு தேவைகள் தொடர்பாக மனுக்கள் அளித்து பயன்பெறலாம் என்றும் குறிப்பிட்டார்.


இந்த முகாமில் தாசில்தார் அசோக்குமார், பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், முன்னாள் கவுன்சிலர் முத்துசாமி, மருத்துவர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அனைத்து துறையைச் சேர்ந்த அதிகாரிகள் முகாமில் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர்.


மேலும், போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம், துணை தாசில்தார் எழில்மொழி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தேவேந்திரன், ஒன்றிய அவைத் தலைவர் ராஜாமணி, துணை செயலாளர் அற்புதம் செந்தில், நிர்வாகிகள் சந்துரு, செழியன், மேல்தெரு முருகன், பொதுக்குழு உறுப்பினர் முர்த்துஜா, ஊராட்சி செயலாளர் கோவிந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884