Type Here to Get Search Results !

கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல், புனரமைத்தல் பணிக்காக அரசு மானிய உதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு.

Image source : google.com

தருமபுரி, ஜூலை 23 | ஆடி 07 -

தமிழ்நாட்டில் சொந்தக் கட்டிடங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வரும் கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்ள, தமிழக அரசு மானியத் தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.


இந்தத் திட்டத்தின் கீழ் தேவையான தகுதிகள் பின்வருமாறு:

  • தேவாலயம் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாக சொந்தக் கட்டடத்தில் இயங்கியிருக்க வேண்டும்.

  • தேவாலயம் எந்தவொரு வெளிநாட்டு நிதியுதவியையும் பெற்றிருக்கக்கூடாது.

  • ஒருமுறை மானியம் பெற்ற தேவாலயம், அதற்குப் பிறகு 5 ஆண்டுகள் வரை மீண்டும் விண்ணப்பிக்கத் தகுதியற்றது.


அரசு சமீபத்தில், பின்வரும் கூடுதல் பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கும் வகையிலும், கட்டடத்தின் வயதின்படி மானியத் தொகையை உயர்த்தியும் அறிவுறுத்தியுள்ளது:


அனுமதி பெற்ற கூடுதல் பணிகள்:

  1. தேவாலய பீடம் கட்டுதல்

  2. கழிவறை வசதி அமைத்தல்

  3. குடிநீர் வசதிகள் உருவாக்கல்

  4. ஸ்டாண்ட், மைக்செட், ஒலிப்பெருக்கி ஏற்பாடு

  5. நற்கருணை பேழை பீடம்

  6. திருப்பலிக்காக தேவையான பாத்திரங்கள், மெழுகுவர்த்தி ஸ்டாண்டுகள், பெஞ்சுகள்

  7. தேவாலய சுற்றுச்சுவர் அமைத்தல்


கட்டட வயதுவழங்கப்படும் மானியம்
1. 10–15 ஆண்டுகள்₹10 லட்சம்
2. 15–20 ஆண்டுகள்₹15 லட்சம்
3. 20 ஆண்டுகள் மற்றும் அதற்குமேல்₹20 லட்சம்


திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் தேவாலயங்கள், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 4ஆம் தளத்தில் அமைந்துள்ள, அறை எண் 512 – மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவகத்தை நேரில் தொடர்புகொண்டு கூடுதல் விவரங்களை பெறலாம். இத்தகவலை தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஷ், இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டுள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies