தருமபுரி, ஜூலை 15:
முதற்கட்டமாக, தருமபுரி மாவட்டத்தில் ஜூலை 15 முதல் அக்டோபர் 3, 2025 வரை 176 முகாம்கள் நடைபெற உள்ளன. இதில் நகர்ப்புறங்களில் 33 முகாம்கள், ஊரக பகுதிகளில் 143 முகாம்கள் நடைபெறும். அரசுத் துறைகளின் 89 சேவைகள் (நகரப் பகுதி - 43, ஊரகம் - 46) இதில் வழங்கப்படும்.
முகாம்களில் மக்கள் பெற்ற முக்கிய சேவைகள்:
-
பிறப்பு சான்றிதழ்கள்
-
மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம்
-
திருமண நிதி உதவித் திட்டம்
-
வேலை உறுதி திட்ட அடையாள அட்டைகள்
-
மாற்றுத் திறனாளிகளுக்கான சேவைகள்
இதனை முன்னிட்டு 1373 தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு, தேவையான ஆவணங்கள் குறித்த தகவல்கள் கொண்ட கையேட்டுகள் வழங்கி வருகின்றனர். முகாம்களில் கிடைக்கும் மனுக்களுக்கு உடனடியாகவோ, இல்லை என்றால் அதிகபட்சம் 45 நாட்களுக்குள் தீர்வு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தருமபுரி, பென்னாகரம், ஏரியூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற முகாம்களில் பல பயனாளிகள் அரசு நலத்திட்ட உதவிகளை உடனடியாக பெற்றனர். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ்.எஸ். மகேஸ்வரன், நகர்மன்றத் தலைவர் திருமதி லட்சுமி, துணைத்தலைவர் திருமதி நித்யா, சமூக நல அலுவலர் திருமதி கலாவதி, நகராட்சி ஆணையர் திரு சேகர், மற்றும் பல அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.