பாலக்கோடு, ஜூலை 26 | ஆடி 08 -
முகாமில் பாலக்கோடு தாசில்தார் அசோக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ரேணுகாதேவி, மருத்துவ அலுவலர்கள் சோனியா, இளங்கோ, இயற்கை மற்றும் யோகா மருத்துவர் பிருத்திவிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் உரையாற்றிய திட்ட அலுவலர் அசோக்குமார், “மக்களின் தேவைகளை நேரில் கேட்டு தீர்வு காணும் வகையில், தமிழக முதல்வர் அவர்களின் முன்னெடுப்பில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் கடந்த வாரம் சிதம்பரத்தில் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் மூன்று கட்டமாக ஆகஸ்ட் மாதம் வரை 10 ஆயிரம் முகாம்கள் நடைபெற உள்ளன,” என்றார்.
“இம்முகாம்களில், வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டை, முதியோர் ஓய்வூதியம், மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கான மனுக்களை பொதுமக்கள் அளித்து பயன்பெறலாம்,” என்றும் அவர் வலியுறுத்தினார். முகாமில் பல துறை அலுவலர்கள் ஒரே இடத்தில் இருந்து சேவைகள் வழங்கியதால் பொதுமக்கள் உற்சாகமாக கலந்துகொண்டனர். பஞ்சப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் ரஞ்சித் குமார், மாவட்ட மற்றும் ஒன்றிய நிலை பொறுப்பாளர்கள் சிவக்குமார், முகுந்தன், சாமனூர், மணிவண்ணன், தமிழழகன், சாதன், ஊராட்சி செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் நிகழ்வில் பங்கேற்றனர்.